Friday, 16 September 2016

திருமண பொருத்தம் பதிவு 4

திருமண பொருத்தம் பதிவு 4
திருமண பொருத்தங்கள் பற்றி மூன்று பதிவுகளின் தொடர்ச்சி. இது வரை பலவித
சூட்சுமங்கள் பார்த்தோம். அதன் தொடர்ச்சிகள். இதோ.
1.  ஆண் பெண் இருவருமே வளர்பிறை ஞாயிறு ஜனனம் கூடாது. கிழமை (நாள்) தன்மையில் தவறாகும்.
2. ஆண் பெண் இருவருமே பிரமை.சதுர்த்தி.த்வாதசி. திரியோதசி.இத் திதிகளில்
இருவர் ஜனனம் இருப்பின். சேர்க்கவே கூடாது. 
3. இதே மாதிரி பெண் நட்சத்திரம் வதை பார்ப்பது போலவே ஆண் முதல் பெண்னிற்கும் பார்க்க வேண்டும்.
4. பெண சாரம் முதல் 22 நட்சத்திரமு ஆண் நட்சத்திரம் முதல் 22 நட்சத்திரம் இருப்பின்.சேர்க்க -வே கூடாது. 
5. சேமதாரை தானே என்று நூறூ சதவீதம் சேர்க்கவே கூடாது. 
6. அடுத்து மிக முக்கியமாக பெண்னின் ஜனன நாம யோகத்திற்கு யோக நட்சத்திரம் ஆண் நட்சத்திரம் என்றால் மிகவும் சிறப்பு.அதுவே அவயோக நட்சத்திரம் எனில்
கூடவே கூடாது. 
7. இதேமாதிரி ஆண் ஜனன நாம யோகத்திற் வரும். யோக நட்சத்திரம்
பெண் நட்சத்திரம் எனில் மிக மிக சிறப்பு. அதுவே அவயோக நட்சத்திரம் பெண்
என்றால் சேர்க்க கூடாது. 

இந்த ஆய்வு கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

பலவழிகளில் ஆண் பெண் இருவரும் அமாவாசை. கிரகணம் நிலை தவறாகும்.இரண்டு பேருமே சௌபாக்கிய நாம யோகம். வியாகாதம் வைதீருதி நாம யோகங்களில் பிறந்திருக்க கூடாது. ஆண் பெண் இருவரும் .செவ்வாய்கிழமை மேச விருட்சக ராசிகள்
லக்னமாகவோ.ராசியாகவோ ஜனனம் கூடவே கூடாது. அதற்கு காரணம் ராசிகள்
6.8.ஆக வருவது மட்டும் காரணம் அல்ல. மேசம் நெருப்பு தன்மையும். விருட்சகராசி நீர் தன்மையும் பெற்று ஆறூ எட்டு நிலை தவறாகும்.பெண் ஜனன லக்னத்திற்கு பாதகஸ்தானம் ஆண் லக்னமாகவோ.அல்லது ஆண் ஜனன லக்னத்திற்கு பாதகஸ்தானமாக வரும் ராசியே பெண் லக்னம் எனில் சேர்க்கை கூடாது.இவற்றுக்கு மேலாக என் குரு நாதர் தவத்திரு மகரிஷி அவர்கள்
நமக்களித்த எதிரிடை மிக அவசியம் பார்க்க வேண்டும். 
மேலும் சூட்சுமங்கள் தொடரும் ..நண்பர்கள் பயன்படும் படி இதற்கு சூட்சுமங்கள் எழுதவும் நன்றி.

No comments:

Post a Comment