திருமண பொருத்தம் பதிவு 6
இது வரை பொருத்தம் பார்க்க மிக முக்கியத்துவம் வாய்ந்த சில சூட்சுமங்களை ஐந்து
பதிவுகளில் பார்த்தோம்.. இது வரை பார்த்த சூட்சுமங் களுடன்.பொருத்தம் பார்ப்போம்.
இந்த பதிவில், தினப் பொருத்தம்.நிலைகளை ஆய்வு செய்வோம். பெண்
நட்சத்திரம் முதல் எண்ண ஆண் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9, 11,13, 15, 18, 20, 24, 26. ஆம்
நட்சத்திரங்களாக வந்தாலும். ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், திருவோணம், ஆகிய நட்சத்திரங்கள் ஆண் பெண் இருவருக்கும் ஏகமாக
வந்தால் சிறப்பு என்றும் அஸ்வினி, கார்த்திகை , மிருகசீரீடம், புனர்பூசம், உத்திரம்,
சித்திரை, அனுஷம், உத்திராடம், ஆகியவை ஆண் பெண் இருவருக்கும் இருப்பது
மத்திமம்.என்று பஞ்சாங்கங்களில் சொல்லப்படுகிறது.
அதை பார்த்து விட்டு மேலும். தினப்பொருத்தம் பார்க்க :-
பெண் லக்னம் ஆண் லக்னம் நிலை என்ன. பெண்ணின் லக்னாதிபதி ஆண்ஜாதகத்தில்
நிலை என்ன, சுப நிலைகளை பெற்று இருப்பது நலம்..ஆனா அசுப நிலைகலோ, வக்கிரம்,
அஸ்தமனம், மாரக, பாதக, பாபிகள் நிலை தொடர்புகள் தவறாகும். இதேபோல் ஆண்
லக்னாதிபதி பெண் ஜனன ஜாதகத்தில் சுப நிலைகளை பெற்றுரிக்க வேண்டும்.நலம்.
அசுப நிலைகலோ, வக்கிரம், அஸ்தமனம், மாரக, பாதக, பாபிகள் தொடர்புகள் தவறு.
பெண்ணின் ஜாதகத்தில்- சுக்கிரன் நின்ற வீடே ஆண் லக்னமாக வருவது சிறப்பு.
இதேபோல், ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற வீடே பெண் லக்னமாக வருவதும் சிறப்பு.
பெண்ணின் லக்னாதிபதி, ஆண் ஜாதகத்தில் சுப நிலை பெற்று இருந்தால் சிறப்பு..
அசுப நிலைகள் பாபிகள் தொடர்பு தவறாகும்.இதே போல ஆண் லக்னாதிபதி
பெண் ஜாதகத்தில், சுபநிலை பெறுவது சிறப்பாகும். அசுப நிலைகள், பாபிகள் -
தொடர்பு தவறாகும். பெண்ணின் ஆருட லக்னம் ஆண் லக்னம் மாக வருவது
சிறப்பு. .ஆணின் ஆருடலக்ன பெண் லக்னமாக வருவதும் சிறப்பாகும்.இதற்கெல்லாம்
மேலாக :-என் குரு நாதர் தவத்திரு மகரிஷி அவர்கள் நமக்களித்த எதிரிடையில்,
ஆண் பெண் இருவர், லக்னம் லக்னாதிபதிகள், ஒன்றுக்கு ஒன்று எதிரிடையில் கூடவே
கூடாது. மேலும் தினம் பொருத்தம் நிலை தொடர்பு சூட்சுமங்கள் முகநூல்
நண்பர்கள் பயண்படும்படி எழுததவும். நன்றி
No comments:
Post a Comment